Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 இணையதள சேவைகள் தொடக்கம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருவாய் நிர்வாக இணையதளம், துணை ஆட்சியராக வலைதளம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்டம் மாறுதல் வலைதளம் ஆகிய வலைதளங்களை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் திரு.கே. பணீந்திர ரெட்டி, வருவாய் துறை முதன்மைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இணை ஆணையர் திருமதி சீதாலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வருவாய் துறையானது நிர்வாக அமைப்புக்குள் முதுகெலும்பாக இருப்பதோடு மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டங்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் சான்றிதழ் வழங்கும் திட்டங்கள் போன்ற திட்டங்களை பற்றி பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக வருவாய் நிர்வாக ஆணையத்தால் www.cra.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வருவாய்த் துறை அலுவலகம் சம்பந்தப்பட்ட அரசு திட்டங்களின் விவரம் மற்றும் அரசு ஆணைகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் குடிமைப்பணி யின் கீழ் பணிபுரியும் அலுவலர்களின் நிர்வாக தேவையை பூர்த்தி செய்வதற்காக http://www.crt.tn.gov.in இந்த வலைதளம் மூலம் அரசு விதிகள் மற்றும் சட்டங்கள், வெளியிடப்படும் அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணி மாறுதல் மற்றும் பணி நியமனங்கள் ஆகியவற்றை பற்றிய விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் கோரிக்கைகளை பரிசீலித்து மாறுதல்களை இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவதற்காக http://www.cra.tn.gov.in என்ற வலைதளம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி மாறுதல் வலை தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |