ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜவுளி வியாபாரி என சுந்தரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஜவுளி வாங்குவதற்காக ஸ்கூட்டரில் ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக சுந்தரேசனின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த மோகனாவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக சுந்தரேசன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.