Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘பெண்குயின்’ படப்பிடிப்பு நிறைவு..!!

ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் ‘பெண்குயின்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

Image result for penguin keerthy suresh

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்துமுடிந்தபின் இப்படத்திற்கு பெண்குயின் என்று பெயர் வைக்கப்பட்டது. இது கீர்த்திக்கு 24ஆவது படமாகும்.

Image

தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் ஜானரைச் சேர்ந்த இப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் ஸ்டோன் பென்ச் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

Penguin movie shooting wrap up

சந்தோஷ் நாராயணன் இசையில் கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் இப்படமானது வெளிவரயிருக்கிறது. இதற்குப்பின் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் அடுத்தப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

 

Categories

Tech |