பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நத்தம் ஓங்கே பள்ளம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்தது 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்ட யானை கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதன் பின் கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக விட்டனர்.