Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 மாதங்களாக சிரமம்…. தாய்-மகள் சடலமாக மீட்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், பவன்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட ரம்யா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குணமடையவில்லை. இந்நிலையில்  வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் ரம்யா தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யா மற்றும் பவன்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |