Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலின் கதவைத்திறந்து சிறுவன் பலி….. கழிவறை கதவு என தவறாக நினைத்தால் நேர்ந்த விபரீதம்…!!

கேரளாவில் ஓடும் ரயிலில் சிறுவன் ஒருவன் கழிவறை கதவை திறப்பதாக நினைத்து ரயிலின் வெளிக்கதவை திறந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்திலிருந்து ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலில் மலப்புரம் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் கோட்டயம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது சித்திக்கின் பத்து வயது மகனான முகமது இசான் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரம் ஆகியும் சிறுவன் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அவனை தேடி வந்துள்ளனர். அப்போதுதான் கழிவறை கதவு என நினைத்து சிறுவன் ரயிலின் வெளிக் கதவை திறந்து கீழே விழுந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக சிறுவனின் பெற்றோர் ரயிலின் சங்கிலியை பிடித்து அளித்துள்ளனர். பின்னர் ரயில் நின்றவுடன் சிறுவனை தேடியுள்ளனர். அப்போதுதான் அந்த சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டின் கீழே கிடந்ததை பார்த்துள்ளனர். உடனடியாக அவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |