நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு இருப்பதை கண்டு அலறியடித்து ஓடியுள்ளார்.
பிரித்தானியாவின் Stourbridge என்னும் பகுதியில் வசித்து வரும் லாரா டிரான்டர்(34) நள்ளிரவில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அலறியடித்து வெளியே ஓடியுள்ளார். பின்னர் லாரா கழிவறையில் பாம்பு உள்ளதாக கூறி தன் தோழி சாராவை உதவிக்கு அழைத்துள்ளார்.
ஆனால் லாரா குடித்துவிட்டு உளறுகிறார் என அவரது தோழி எண்ணியுள்ளார். இதன் பிறகு பாம்பு பிடிப்பவர்களை அழைத்த போது காலையில்தான் வரமுடியும் என கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து சாரா தன் சகோதரரான Dan-ஐ அழைத்துள்ளார். பின்னர் Dan தனது நண்பரான Steve-ஐ உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனை அடுத்து Dan மற்றும் Steve ஆகிய இருவரும் சேர்ந்து கழிவறையில் இருந்த பாம்பை பிடித்துள்ளார்கள். இது குறித்து லாரா கூறியதில், “அந்த பாம்பின் உருவம் இன்னமும் என் கண் முன்னாலேயே நிற்கிறது. அந்த எண்ணத்திலிருந்து விடுபட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.