Categories
மாநில செய்திகள்

100 ரூபாயை நெருங்கும் தக்காளி விலை…. பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பதினைந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் வருவதால் தக்காளியின் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக தக்காளி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதனால் ஒரு கிலோ நாட்டு தக்காளியின் விலை சென்னை கோயம்பேட்டில் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மார்க்கெட்டிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

இது மேலும் அதிகரித்து நூறு ரூபாயை நெருங்கி விடுமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் எங்கு குறைவாக தக்காளி விற்கப்படுகிறதோ அங்கு அரசே கொள்முதல் செய்து அனைத்து இடங்களுக்கும் பிரித்து அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |