இளைஞர் ஒருவர் குடிபோதையில் போலீசை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மங்கலம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் விநாயகம். இவர் மதக பட்டியில் டாட்டா ஏஸ் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்து விசாரிக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கரமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை பார்த்த போலீஸ்காரர் விநாயகம் அதனை படம் எடுக்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று இளைஞர்களும் விநாயகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்ராஜ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வினோத் என்பவரை தேடி வருகின்றனர்.