மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நெஞ்சக பிரிவில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாரியம்மாள் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பிச்சையா மாரியம்மாளிடன் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் மாரியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மாரியம்மாளை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிச்சையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.