Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடு… வாழ்வாதாரத்தை இழந்த தவிக்கும் கலைஞர்கள்… அரசு உதவுமா…?

நவராத்திரி விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வருமானம் இல்லாமல் கலைஞர்கள் சிலர் சிரமப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 15ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வட மாநிலங்களில் ராமன் ராவணனை அளித்ததை குறிக்கும் நிகழ்ச்சியான ராம்லீலா நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் வில் மூலமாக தீயிட்டு ராவணனின் உருவபொம்மையை பொசுக்கும் நிகழ்ச்சி முக்கியமான ஒன்றாகும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராவணனின் உருவ பொம்மைகள் தயாரிக்கும் சித்திரக் கலைஞர்கள் பெரும் தொழில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

Categories

Tech |