பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெருமாத்தாள் 1558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதனால் பெருமாத்தாளை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் வைப்புத்தொகையை இழந்தனர். மேலும் வெற்றி பெற்ற மூதாட்டி பெருமாத்தாளுக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அழைத்துச் சென்றுள்ளனர்.