நீட் தேர்வில் விலக்கு கோரி கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளது கவனித்தை ஈர்த்துள்ளது. நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. மேலும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதமானது பெருமளவில் குறைந்து வருகின்றது.
இதனை சரி செய்யும் நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி மசோதாவும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்ற மசோதாவும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து பேசினார். அப்பொழுது குற்ற வழக்குகளில் தொடர்புடைய திமுக எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் இவரை தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் ஆளுநரை சந்தித்து பேச உள்ளார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.