செந்தில், கவுண்டமணி இருவரும் சண்டைக் போட்டு கொண்டுள்ளதாகவும், பேசிக் கொள்வதில்லை என்றும் தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். மீண்டும் கவுண்டமணி, செந்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் ஏராளமான ரசிகர்களின் ஆசை. இந்நிலையில் கவுண்டமணி, செந்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டுள்ளதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து செந்திலின் மூத்த மகன் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அதில் ‘எனது அப்பா மற்றும் கவுண்டமணி இருவரும் சண்டை போட்டுக்கொண்டுள்ளதாகவும், பேசிக் கொள்வதில்லை என்றும் தகவல் பரவி வருகிறது. அது உண்மை இல்லை. அவர்களின் அண்ணன்-தம்பி உறவு இப்போதும் நீடிக்கிறது. எல்லோரையும் போலவே நானும் அவர்களது காம்போவை மிஸ் செய்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.