அமெரிக்க அரசு, கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் உள்ள எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கா, அடுத்த மாதத்திலிருந்து கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் இருக்கும் சாலை, நீர்வழி எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய மக்களை மட்டும், நாட்டிற்குள் செல்ல அனுமதிப்போம் என்று தெரிவித்திருக்கிறது.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை காண்பித்து, விமானத்தில் கனடாவிலிருந்தும், மெக்ஸிகோவிலிருந்தும் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுகிறது.
வரும் 2022-ஆம் வருடத்தில் ஜனவரியிலிருந்து, கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து, அமெரிக்கா பயணிக்கும் மக்கள், தடுப்பூசி செலுத்திய ஆதராத்தை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு செயலாளரான Alejandro Mayorkas கூறியிருக்கிறார்.
கொரோனா தொற்றால், கடந்த 2020-ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து, அமெரிக்கா தனது, பக்கத்து நாடுகளான மெக்ஸிக்கோ மற்றும் கனடாவுடன் தங்களின் போக்குவரத்தை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.