பிரித்தானிய முன்னாள் சுகாதார செயலாளர் Matt Hancock திருட்டுத்தனமாக திருமணமான ஒரு பெண்ணுடன் முத்தமிட்டுக் கொள்ளும் போது கேமராவில் சிக்கிய காட்சியால் பதவியிழந்த நிலையில் தற்போது அவருக்கு மிகப்பெரிய கௌரவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயாகிய Gina Coladangelo (43) என்ற பெண்ணும், சுகாதார செயலாளர் Matt Hancock (42)-ம் திருட்டுத்தனமாக அலுவலகத்தில் முத்தமிட்டுக் கொண்ட காட்சி கேமராவில் சிக்கியுள்ளது. இந்த காட்சி வெளியாகி பாராளுமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் சுகாதார செயலாளர் அவருடைய பதவியை இழக்கவும் அந்த காட்சிகள் காரணமாக அமைந்ததோடு, அவர்களுடைய திருமணங்களையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இருப்பினும் தங்களது துணைகளை இழந்த பிறகு இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சிறப்பு பிரதிநிதி எனும் பெரும் பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சீதோஷ்னம் தொடர்பில் Hancock-க்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதார பாதிப்புகளிலிருந்து எவ்வாறு தங்களை மீட்டெடுக்கும் என்பது குறித்து ஆலோசனை வழங்குவது தான் Hancock புதிய பொறுப்பு ஆகும்.
அதேசமயம் Nimko Ali என்ற பெண் தான் Hancock-க்கு இந்த பொறுப்பு கிடைக்க காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் Nimko பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவியான கேரியின் தோழியும், பெண்ணுறுப்பு சிதைப்புக்கெதிராக பிரச்சாரம் செய்யும் சமூக ஆர்வலர்களும் ஆவார். அதோடு மட்டுமில்லாமல் இந்த பொறுப்பு ஏற்கனவே இங்கிலாந்து வங்கியில் பொருளாதார நிபுணராக இருந்ததற்காக Hancock-க்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது.