Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதை திறக்கவே முடியல…. வாக்கு எண்ணிக்கை தாமதம்…. முகவரின் செயல்….!!

வாக்கு எண்ணவிருக்கும் மையத்தில் வாக்குப் பெட்டிகளை திறக்க முடியாத காரணத்தினால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் சீல் வைத்து அறையில் இருந்த வாக்குப் பெட்டிகளை எடுத்து அரசு ஊழியர்கள் வெளியே கொண்டு வந்துள்ளனர். அப்போது அந்த வாக்கு பெட்டியில் உள்ள சீலை அகற்றி பின் அதை திறந்து உள்ளே இருந்த வாக்குச்சீட்டுகளை கீழே கொட்டி உள்ளனர்.

இதனை அடுத்து பீளமேடு ஊராட்சியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து வேட்பாளரின் முகவர் ஒருவர் சிறிய கல்லை எடுத்து வந்து அதன் மூலமாக வாக்குப்பெட்டியை திறந்துள்ளார். மேலும் வாக்குப்பெட்டிகள் திறக்க முடியாத காரணத்தினால் எண்ணிக்கை தாமதமாக நடைபெற்றிருக்கிறது.

Categories

Tech |