Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 60 லட்சம்…. வசமாக சிக்கிய அதிகாரிகள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு….!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இரண்டு அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் அலுவலர்கள் 2 பேர் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் 2 கார்களில் பணப் பரிமாற்றம் செய்ததை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மறைவாக அமர்ந்து பார்த்துள்ளனர். அதன்பின் அவர்களின் அருகில் விரைந்து சென்று காவல்துறையினர் இருவரையும் மடக்கி பிடித்து அவர்கள் வைத்திருந்த பணத்தை கைப்பற்றினர். இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் வனத் தோட்டக் கழக மண்டலச் செயலாளர் நேசமணி மற்றும் வனவர் சங்கர் கணேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் நேசமணி காப்புக்காடு பகுதிகளில் செடிகள் மற்றும் மரக்கன்று வளர்த்து பராமரிக்கவும் மற்றும் உற்பத்தி செய்வதற்கும் வருகின்ற ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்குமாறும் அந்த தொகையை வனவர்கள் வசூலித்து தரும்படி கூறியதால், அவர்களிடம் இருந்து வசூலித்த தொகை 16 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாயை சங்கர் கணேஷ் நேசமணியிடம் கொடுக்க முயன்ற போது இருவரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த காரை சோதனை செய்ததில் கூடுதலாக 20 இலட்சம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவற்றைப் போல நேசமணி யாரிடமெல்லாம் லஞ்சம் வாங்கி இருக்கிறார் என்பது குறித்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அலுவலகத்தை சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட 35 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாயும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சங்கர் கணேஷ் மற்றும் நேசமணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Categories

Tech |