Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாவோயிஸ்டுகள் வீட்டில் சோதனை… என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி… தேனியில் பரபரப்பு…!!

மாவோயிஸ்டுகள் 2 பேர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவோயிஸ்ட் ஆக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு காவல்துறையினர் வேல்முருகன் மற்றும் அவருடன் இருந்த பழனிவேல், முத்துச்செல்வம் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் இணைந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் காவல்துறையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

அந்த துப்பாக்கி சூட்டில் வேல்முருகன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் வேல்முருகனின் குடும்பத்தினருக்கு இதில் தொடர்பு உள்ளதா என சந்தேகமடைந்த அதிகாரிகள் நேற்று வேல்முருகனின் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

இதேபோல் உத்தமபாளையம் பண்ணைபுரத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கார்த்தி என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் தலைமறைவான கார்த்திக் எங்கே என அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 2 பேர் வீட்டிலும் எந்த ஒரு ஆயுதங்களும் ஆவணங்களும் சிக்கவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |