ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டில் பூ விற்பனை அமோகமாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று பூ மார்க்கெட்டில் பூ விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் மார்கெட்டில் பூக்களை வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், ஏராளமான வியாபாரிகள் குவிந்து காணப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் காணப்பட்டது. மேலும் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. இதனால்ஆயுத பூஜையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்கெட்டில் பூ விற்பனை அமோகமாக நடைபெற்றது.