உணவு பஞ்சத்தினால் மக்கள் வாடுவது குறித்து மனித உரிமைகள் குழு சிறப்பு அறிக்கையாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வட கொரியாவில் கடந்த சில மாதங்களாக உணவு பஞ்சத்தினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வடகொரியாவை ஆட்சி செய்யும் அரசு அதனை மறைத்தாலும் வெளி உலகத்திற்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்பது தெரிகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதிலும் கடந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வடகொரியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இவற்றின் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான சீனாவுடன் இருந்த வர்த்தகமும் பெரும் சரிவை கண்டது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் அரசு நடத்தும் தொலைக்காட்சி ஒன்று வடகொரியா, உணவு நெருக்கடியை எதிர் கொண்டு வருகிறது என்று கூறியது.
மேலும் நாட்டின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக விவசாயத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினர். இந்த நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் உணவு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இது குறித்து ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் அறிக்கையாளர் டோமாஸ் ஓஜியா குயின்டானா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வடகொரியாவின் உள்ளூர் மற்றும் சாதாரண மக்கள் தினசரி வாழ்க்கையை கழிப்பதற்கே போராடி வருகின்றனர். இது விரைவில் மனிதாபிமான நெருக்கடியாக மாறும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உணவு பஞ்சத்தில் மோசமாக சிக்கியுள்ளனர்.
அதிலும் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பால் விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும். இதனை தொடர்ந்து வடகொரியாவுக்கு தேவையான மனிதாபிமான மற்றும் உயிர்காக்கும் உதவிகள் புரிதலை எளிமையாக்க வேண்டும். குறிப்பாக மக்கள் தங்களது தலைவர்களால் ஏற்படும் துன்பத்தை அனுபவிக்க காரணமாக உள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை உடனே நீக்குமாறு ஐ.நா.வின் தலைவர்கள் மற்றும் உதவி அமைப்புகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வடகொரியா ஏவுகணை திட்டங்கள் தொடர்பான செயல்பாடுகளுக்காக உலக நாடுகளுக்கு தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் மக்கள் பஞ்சத்தினால் உயிரிழப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.