Categories
தேசிய செய்திகள்

நீதித்துறைVSகாவல்துறை ….. ”தலைநகரின் அவமானம்”….. தேசியளவில் ட்ரெண்டிங் …!!

தலைநகர் டெல்லியில் சட்டத்துறையும் , காவல்துறையும் மோதிக்கொண்டு போராட்டம் நடைபெறும் சம்பவம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரும் , காவல்துறையினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.  இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதில் காவல்துறை மற்றும் வழக்கறிஞ்சர் மோதல் வன்முறையாக வெடித்தது.

இந்த வன்முறையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 8-க்கும் மேற்பட்ட வழக்கறிஞ்சர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பின்னர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞ்சர்கள் அங்கிருந்த ஏராளமான காவல்துறை வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தினார். இதனால் தலைநகர் டெல்லி பரபரப்புக்கு பஞ்சமின்றி இருந்தது.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்நிலையத்தை வழக்கறிஞ்சர்கள் முற்றுகையிட்டதோடு , போலீஸாரையும் தாக்கினார். ஆங்காங்கே போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் நடந்தாலும் கூட போலீஸ்ஷை தாக்கிய வழக்கறிஞ்சர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞ்சர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

https://twitter.com/i_theindian/status/1191650034128867329

இதையடுத்து டில்லி உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரம்  அடைந்த போலீசார் தாக்குதல் நடத்திய வழக்கறிஞ்சர் மீது நடவடிக்கை இல்லை , எங்கள் மீது மட்டும் நடவடிக்கையா ? என்று இன்று டெல்லி காவல்துறை தலைமையலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் இப்படி எங்களை தாக்கினால் நாங்கள் எப்படி பணி செய்ய முடியும் . எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழக்க வேண்டுமென்று வழக்கறிஞ்சர்களுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

அதோடு காவலர்கள் தாக்கப்பட்ட விஷயத்தில்  வழக்கறிஞ்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.டெல்லி போலீஸ் கமிஷனரான அமுல்யா பட்நாயக்  தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் , போலீசாரை தாக்கிய வழக்கறிஞ்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.டெல்லி போலீஸ்  மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் வருவதால் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கிணங்க டெல்லி கமிஷனரான அமுல்யா பட்நாயக் போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறையிடம் பேசினார் .

அப்போது காவல்துறை தலைமை அலுவலகத்துக்குள் இருந்து பேசிய அமுல்யா பட்நாயக், காவலர்களை போராட்டத்தை கைவிட்டு காவல் தலைமையகத்தின் உள்ளே  வரும்படியும் , கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை  நடத்துவதாகவும் கூறினார். அதை காவலர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் பின்னர் அவரே காவல்துறை தலைமை அலுவலகத்தை விட்டு வெளியே வந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடத்திலேயே போலீசாருடன் உரையாடினார்.

அதில் பேசிய அமுல்யா பட்நாயக் நீங்கள் உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள். பிரச்சனை பல இருக்கின்றன என தெரியும். அதை சரிசெய்வதற்கு நாம் முயற்சி எடுப்போம். காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளதால் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். அத்தகைய நிலையிலேயே இந்த பிரச்சனையை அணுகுவோம். நீதிமன்றம் மூலமாக சட்டரீதியான நடவடிக்கை  எடுப்போம் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் போலீசார் கடும் கோபத்தில் இருப்பதால் போராட்டத்தை கைவிடவில்லை.

இத்தைகைய சூழ்நிலையில் ஏன் காவலர்கள் டெல்லி போலீஸ் தலைமையகம் முன்பு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனரான அமுல்ய பட்நாயக் ஆலோசனை நடத்தி வருகின்றார். இதையடுத்து டெல்லி ஆளுநர் அணில் பைஜால் மத்திய அரசு சார்பில் தலையிட்டு போராட்டம் முடிவுக்கு வரும் என்று கருதப்படுகின்றது.

இந்த ஆலோசனை இறுதியில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என தெரியவரும். குறிப்பாக டெல்லியில் துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக டெல்லி போலீசாரிடம் என்னை கோரிக்கையை முன் வைப்பார் , அதேபோல் வழக்கறிஞர் மீது விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு விஷயங்கள் தெரிய வரலாம். அதே போல இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அதுவும் உடனடியாக முடிவுக்கு என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

மொத்தத்தில் தலைநகர் டெல்லியில் காவல்துறையும் , நீதித்துறையும் மோதிக்கொண்டுள்ளது இந்தியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து #LawyersVsDelhiPolice என்ற ஹேஷ்டக் இந்தியளவில் ட்ரென்ட்_டாகி வருகின்றது.

Categories

Tech |