உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள முள்ளிகாடு பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கோட்டப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி நாட்டு துப்பாக்கியை மாட்டுக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பழனியை கைது செய்ததோடு அவர் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.