தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது.
கடலூர் மாவட்டத்திலுள்ள கோட்டைக்காடு கிராமத்தையும் மற்றும் சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டத்தை இணைக்குமாறு வெள்ளாற்று தரைப்பாலம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பாசிகுளம் உள்பட 40-க்கும் அதிகமான கிராம மக்கள் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதன்பின் வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் முடிவடைந்ததால் பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக இந்தப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.