தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.பி ரமேஷுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பணிக்கன் குப்பத்தில் எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். அதன்பின் திடீரென அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் மருத்துவர்கள் அவரை பிரேத பரிசோதனை செய்ததில் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் ரமேஷின் உதவியாளர் நடராஜன் மற்றும் தொழிற்சாலை மேலாளர்களான அல்லாபிச்சை, சுந்தர், கந்தவேல், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்ற நிலையில் ரமேஷ் நேரில் சென்று ஆஜராகியதில் அவரை இரண்டு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்குப் பிறகு அரசு மருத்துவமனையில் ரமேஷுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.