மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவையை இண்டிகோ நிறுவனம் முதன் முறையாக தொடங்கியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்க வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்கள் சிலர் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை,பெங்களூர், மும்பை, ஹைதராபாத் என ஒரு நாளைக்கு 20 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்நாட்டு விமான சேவையை தவிர்த்து வெளிநாட்டு விமான சேவையாக துபாய்க்கு மட்டும் வாரம் தோறும் மூன்று நாட்கள் இசை என்று வருகிறது. மேலும் இந்த நிறுவனமானது மதுரையில் இருந்து திருப்பதிக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் விமானத்தை இயக்க போவதாக அறிவித்துள்ளது. இந்த விமானம் மதியம் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சரியாக 4.20க்கு திருப்பதி சென்றடையும். அதனைத் தொடர்ந்து 4.40 மணிக்கு மேல் திருப்பதியில் இருந்து புறப்பட்டு 6.40 மணி அளவில் மதுரை வந்தடையும் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய இண்டிகோ நிறுவனத்திற்கு அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.