அடர்ந்த காட்டில் இருந்து எட்டு வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினைச் சேர்ந்த ஜூலியா என்ற 8 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பெற்றோர் சகோதரன் மற்றும் உறவுக்கார சிறுவன் ஆகியோருடன் நடைபயிற்சி சென்றுள்ளாள். அப்பொழுது அவரது பெற்றோர்கள் ஜூலியா மற்றும் இரு சிறுவர்களையும் பவேரிய காட்டில் தவறவிட்டுள்ளனர். இதனை அடுத்து அவசர மீட்புக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விரைந்து வந்து இரு சிறுவர்களை மட்டும் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். ஆனால் ஜூலியாவை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. மேலும் ஒரு நிலையில் இது உயிருக்கு ஆபத்தான சூழல் என்று போலீசார் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து நேரம் நகர செவ்வாய்க்கிழமை காலை குழந்தை இனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மேலும் செக்கோஸ்லோவேகியா எல்லையில் இருக்கும் இருநாட்டு அவசர உதவிகுழுவினரைச் சேர்ந்த 1400 பேர், 115 மோப்ப நாய்கள், thermal imaging கமெராக்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் ஆல்ப்ஸ் மலையேற்ற வீரர்கள் அனைவரும் குழந்தையை பவேரியவின் அடர்ந்த காட்டின் மரங்களிலும் மலைகளிலும் தேடியுள்ளனர்.
இறுதியாக ஜூலியா செக்கோஸ்லோவேகியா நாட்டை சேர்ந்த வனத்துறை ஊழியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாள். குறிப்பாக இவ்வாறு குழந்தை கிடைத்ததே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று பவேரிய உள்துறை அமைச்சரான Joachim Herrmann தெரிவித்துள்ளார். அதிலும் அடர்ந்த காட்டுக்குள் சிறுமி இரண்டு இரவுகள் தனியாக இருந்து சமாளித்தது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமூட்டும் விஷயம் தான் என்று அனைவரும் கூறுகின்றனர்.
இருப்பினும் அதீத குளிர் காரணமாக ஜூலியா hypothermia என்ற பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பவேரிய காவல்துறையின் தலைமையக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து பவேரிய செஞ்சிலுவைச் சங்கம் கூறியதில் “குழந்தை அடர்ந்த காட்டில் இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது உண்மையிலே அதிசயமான நிகழ்வு” என்று தெரிவித்துள்ளனர்.