Categories
உலக செய்திகள்

தொடங்கும் பனிப்பொழிவு…. எச்சரித்துள்ள ஆராய்ச்சியாளர்கள்…. தகவல் வெளியிட்ட வானிலை மையம்….!!

ஸ்காட்லாந்தில் இந்த மாத இறுதியில் இருந்து பனிப்பொழிவானது துவங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இந்த மாத இறுதிக்குள் வெப்பநிலை உறைபனிக்கு கீழாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் காற்று குளிர்ச்சியானது குறிப்பிட்ட வெப்பநிலையில் இருந்து சரிந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரித்தானியா வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “இந்த வாரம் ஸ்காட்லாந்தின் வடமேற்கில் இருந்து குளிர்ந்த காற்று மிட்லாண்ட்ஸ் வரை வீசும். மேலும் லண்டனில் உள்ள பல பகுதிகளில் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். இதுமட்டுமின்றி வரும் வாரங்களில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரபல ஊடகம் ஒன்று அளித்த தகவலின் படி வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 6 மணிக்கு பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அந்நாளில் ஸ்காட்லாந்தின் வடக்கு எல்லைப் பகுதிகளில் வெப்பநிலையானது பூஜ்ஜியத்திற்கு கீழாக அதாவது -1 ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |