Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ exclusive கிளிக்… வில்லன் பெருமை படும் தருணம்… அவரே வெளியிட்ட பதிவு…!!!

தன்னை பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ளும் தருணங்களின் புகைப்படத்தை வலிமை பட வில்லன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கலன்று வெளியாக உள்ள இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் வலிமை படத்தின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் வலிமை பட வில்லன் கார்த்திகேயா தனது சமூக வலைத்தள பக்கத்தில் exclusive புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவரும் நடிகர் அஜித்தும் பைக்கில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளனர். மேலும், தன்னை பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ளும் ஒரு சில தருணங்களில் இதுவும் ஒன்று. நானும் அஜித் சார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |