சண்டிகர் மாநிலத்தில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சண்டிகரில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் தற்போது 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுவது பற்றி அறிவித்துள்ளது. சண்டிகரில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ஜூலை 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்டில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. மேலும் 5 மற்றும் 6 வகுப்புகள் செப்டம்பர் 2 முதல் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டார்கள். இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கு திரும்ப அனுமதிக்குமாறு நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அக்டோபர் 18 முதல் சண்டிகரில் உள்ள 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளது. இதுபற்றி தனியார் பள்ளி தலைவர் மற்றும் பல தனியார் பள்ளிகளின் முதல்வர்களும், தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் உயர் வகுப்புகளில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். எனவே நாங்கள் ஆரம்ப வகுப்புகளை மீண்டும் தொடங்கினால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் கூட ஆரம்ப நாட்கள் பதிவு செய்யப்பட்ட 10 -15% இல் இருந்து தற்போது வரை 50 % மேல் சென்றிருக்கிறது.