தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தை குப்பைகள் அற்ற மாநகராட்சியாக திருப்பூரை மாற்றும் திட்டத்தின் துவக்கமாக “ஜீரோ வேஸ்ட் திருப்பூர்” என்ற இயக்கம் திருப்பூரில் துவங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் ஏறத்தாழ 500 மெட்ரிக் டன் அளவுக்கு சேர்கிறது பல்வேறு வழிகளில் இவை அகற்றும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. குப்பைகள் சேர்வதை தவிர்த்தல், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.
இவற்றில் ஒரு நடவடிக்கையாக தன்னார்வ அமைப்புகளின் மூலம் இது பற்றி விழிப்புணர்வு மற்றும் மாற்று வழி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் “உதான்” தன்னார்வ அமைப்பு மூலம் மாநகராட்சி முதல் மண்டலம் காந்திநகரில் 200 வீடுகள் இணைக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை பணி நேற்று தொடங்கியுள்ளது. இதை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஆரம்பித்து வைத்து விழிப்புணர்வு, துண்டுபிரசுரம், குப்பை சேகரிப்பு கூடை போன்றவற்றை வழங்கினார்.
“ஜீரோ வேஸ்ட் திருப்பூர்” என்ற நோக்கத்தின் முதல் முயற்சியாக மாநகராட்சியுடன் “கார்பன் டைனமிக்ஸ்” மாதன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து அடாப்ட் யுவர் நெய்பர்ஹூட் என்ற இயக்கம் துவங்கியுள்ளது. இதன்மூலமாக தியாகி பழனிச்சாமி நகர் 10 மற்றும் 11 வது வார்டுகளில் உள்ள 200 வீடுகள் இதில் இணைந்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், தரமான குப்பை 100 சதவிகிதம் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பற்றி மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பேசியதாவது, முதல்கட்ட முயற்சியை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி முதல் மண்டலத்திலுள்ள 15 ஆடுகளும் 4 மாதங்களில் குப்பை இல்லாத பகுதியாக மாற்றப்படும் அடுத்த 2 ஆண்டுகள் மாநகராட்சி தொகுதி முழுவதும் இந்த திட்டத்தை முழுமையாக பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும். இந்த நடவடிக்கையால் மாநகராட்சி 100% குப்பை இல்லாத பகுதியாக மாறும் இதற்கு பொதுமக்கள் தரப்பிலும், நிறுவனத்தினரும், முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.