ஐஆர்சிடிசி கழகம் மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தற்போது எந்த வித சேவை கட்டணம் இல்லாமல் பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஐஆர்சிடிசி என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில் பயணிகளுக்கு இணையவழி பயணச்சீட்டு பதிவு மற்றும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் குழு நவரத்தின மதிப்பை பெற்றதாகும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும், பயணிகளுக்கான உணவை வழங்குவதற்கான பொறுப்பை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இணையவழியில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய மட்டுமல்லாமல் மொபைல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும், பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும், வழி செய்தது. இது மட்டுமில்லாமல் தற்போது பேருந்து டிக்கெட்டுகளையும் இதன் மூலமாக முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முறையானது 22 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்தமுறை சோதனையில் இருந்து வந்தது இவற்றிற்கான பயணச்சீட்டின் விலை மட்டுமே வசூலிக்கப்படும். கூடுதலான சேவைக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதையடுத்து ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் ஆப் மூலமாக தினசரி 2000 பேர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து என்றhttp:// www.bus.irctc.co.in இணையதளத்தின் மூலமாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரம் பேருந்து ஆபரேட்டர்கள் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.