Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முறையாக இருக்க வேண்டும்…. கட்சியினர்கள் சாலை மறியல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கான வெற்றியை தவறாக அறிவித்ததாக கூறி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பா.ம.க சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் சக்கரவர்த்தி என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் பா.ம.க வேட்பாளர் சக்கரவர்த்தி தி.மு.க வேட்பாளரை விட 24 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை இருந்துள்ளார்.

அதன்பின் வெற்றி பெற்ற சான்றிதழ் வாங்குவதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலரை அணுகிய போது அவர் தி.மு.க வேட்பாளர் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என அறிவித்துள்ளார். இதனையடுத்து பா.ம.க வேட்பாளர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு கூறியுள்ளார். பின்னர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அலுவலர் வேலாயுதம் மீண்டும் வாக்குகளை எண்ணியதில் தி.மு.க வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ம.க வேட்பாளர் சக்கரவர்த்தி மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சரவணன் உள்பட மூன்று பேர் தேர்தல் அலுவலரிடம் முறையான வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தேர்தல் அலுவலரை கண்டித்து வாக்கு எண்ணிக்கை மையம் முன்பாக 200-க்கும் அதிகமான பா.ம.க கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |