நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை
சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தியதால் தான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். திமுக வன்முறை, தேர்தல் ஆணையத்தின் புதிய சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை பட்டியலிட்டால் நாடு தாங்காது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.