நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை
சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டங்களில் மக்கள் நீதி மையம் குறைவான வாக்குகள் பெற்று இருந்தாலும் இந்த அளவு பின்னடைவை சந்தித்துள்ளது பற்றி அக்கட்சி பரிசீலனை செய்யவேண்டும். என்னதான் கட்சியின் தலைவர் பிரபலமானவராக இருந்தாலும் அடிமட்டத்தில் வேர்கொள்ளாத அமைப்பு வெற்றி பெற முடியாது என்பதே மக்கள் நீதி மையத்தின் தோல்வியை வெளிப்படுத்துகிறது.