இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும்.
இதுவரை இந்தத் திட்டத்தில் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 10வது தவணையான 2000 ரூபாய் டிசம்பர் 15ஆம் தேதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் https://pmkisan.gov.in/Benificiarystatus aspx என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்தி தங்கள் பெயரை சரி பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.