நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் சில உயிரிழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் கொரோணா பாதிப்பால் உயிரிழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மாதம்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குடும்பத்தினர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.5000 வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அம்மாநில மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.