Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பணிகள் தீவிரம்…. ஆர்வமுடன் செலுத்தும் மக்கள்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

கொரோனா தொற்று நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உலக அளவில் கொரோனா தொற்றினால் அதிகமான உயிரிழப்பையும் பாதிப்பையும் சந்தித்தது அமெரிக்கா. அங்கு அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டு வருகிறது. மேலும் அமெரிக்காவில் மாடர்னா, பைசர், பயோஎண்டேக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 40, 35, 76, 876 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. இதனை அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதிலும்  21,74,03,897 பேர் முதல் தவணை தடுப்பூசியும் 18, 67, 14 ,829 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக மூன்றாவது தவணையாக பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசியை  சுமார் 85  லட்சம் பேர் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |