Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் 40 ஆயிரம் அகதிகளுக்கு இடம் கொடுப்போம்..! டுவிட்டரில் பதிவிட்ட கனடா பிரதமர்… வெளியான முக்கிய தகவல்..!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கள் நாடு 40 ஆயிரம் அகதிகளை வரவேற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று ஜி-20 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து பேசியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உட்பட பலரது மனித உரிமைகளை பாதுகாப்பதில் உலகளாவிய சமூகம் உறுதியாக இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் மனிதாபிமான உதவிகள் ஆப்கானியர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து நாங்கள் குரல் எழுப்புவோம். அதேபோல் சுமார் 40 ஆயிரம் அகதிகளை கனடா வரவேற்க தயாராக உள்ளது.

எனவே மற்ற நாடுகளும் அகதிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து தலிபான்கள் தலைநகர் காபூல் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து அந்நாட்டு குடிமக்களும், வெளிநாட்டவரும் ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான்களுக்கு பயந்து பெருமளவில் வெளியேறத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |