Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! 14 கங்காருக்களை அடித்தே கொன்ற சிறுவர்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

ஆஸ்திரேலியாவில் 17 வயது சிறுவர்கள் இருவர் 14 கங்காருக்களை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள லாங் பீச்சில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் ஐந்து பெரிய கங்காருக்களும், ஒரு கங்காரு குட்டியும் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் ஏழு பெரிய கங்காருக்களும், ஒரு கங்காரு குட்டியும் Maloneys Beach பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அதில் காயமடைந்த நிலையில் கிடந்த 6 மாத கங்காரு குட்டி ஒன்று காப்பாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் 17 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த சிறுவர்கள் இருவர் மீதும் கங்காருக்களை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |