Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது பிரியர்களே…. இனி மதுபானம் வாங்க இது கட்டாயம்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க தடுப்பூசி கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன்படி தடுப்பூசி சான்று நகல், அதற்கான குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் தர வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |