உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். நொய்டாவில் இருந்து காசியாபாத்க்கு ஒரு பேருந்து 8 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பாடியா போத் என்ற இடத்தில் மேம்பாலத்தில் வரும்பொழுது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது பேருந்து விழுந்து. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.