Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு… பிரபல நாட்டில் 136 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளூர் பகுதிகளில் 78 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக உள்ளூர் பகுதிகளில் 78% கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 9-ஆம் தேதி முதல் ஏழு நாட்களில் பிரித்தானியாவில் Greater Manchester-ல் உள்ள Trafford-ல் 2006 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புள்ளிவிவரங்கள் 100,000 பேருக்கு 844 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறது. அதேபோல் 639 பேர் கொரோனா தொற்றால் Wellingborough -வில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 573.2-லிருந்து 797.9 ஆக கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு உயர்ந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து Cumbia-வில் உள்ள Barrow-ல் 570 பேர் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வேல்ஸில் உள்ள Torfaen-ல் 718 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றால் 42,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கொரோனா நேர்மறை சோதனை கொண்டவர்களில் கடந்த 24 நாட்களில் 136 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பிரித்தானியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 138,080-ஆக உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் கொரோனாவால் கடந்த வாரத்தில் அதிக பாதிப்புக்களை சந்தித்த ஐந்து பகுதிகள் :

1.Trafford (568.2 to 844.4)

2.Ipswich (479.5 to 736.9)

3.Winchester (340.7 to 576.5)

4.Wellingborough (573.2 to 797.9)

5.Darlington (313.8 to 519.5)

Categories

Tech |