தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளை திறந்து இருக்க வேண்டுமென்று உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் மூன்று நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் விநியோகத்திற்கு அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories