Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு அனுமதி இல்லை…. யாரும் போக வேண்டாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற்று தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் பவனி வருகிறார்.

மேலும் தசரா திருவிழாவிற்காக தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காப்பு கட்டி விரதம் இருந்து சாமி வேடங்களை அணிந்து பக்தர்கள் கலைநிகழ்ச்சி நடத்தி அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து செலுத்துகின்றனர்.

அதன்படி இன்று குலசேகரப்பட்டினத்தில் 9 ஆம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு கிழமை ஆகிய மூன்று தினங்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. இதனால் குலசேகரப்பட்டினத்தில் 10 ஆம் திருவிழா நாளை முதல் 12 ஆம் திருவிழா வரை கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |