சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள்.
தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்தேன். இனியும் என்னால் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. புரட்சித்தலைவர் மறைவிற்கு பிறகு அம்மா ஜெயலலிதாவுடன் இருந்து இந்த கட்சியை பழைய நிலைமைக்குக் கொண்டு வந்தோம். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்ததோ அதே தான் இப்பொழுதும் நடந்து வருகிறது. எனவே நான் கட்சிக்கு வந்து கட்சியை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று ,குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாகவும் கூறி வந்த நிலையில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கேட்டு சசிகலா காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார் .மேலும் எம்ஜிஆர் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை உள்ளதாகவும் கூறப்படுகிறது.