Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணத்தால் ஏற்பட்ட தகராறு….. வாலிபர் செய்த கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…..!!

பணம் கொடுக்காததால் தாயை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் களஞ்சியம் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஹரிஹரன் என்ற மகனுக்கு திருமணமாகாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் மதுவிற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் தனக்கு பணம் வேண்டும் என்று தனது தாயாரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதன் பிறகு தாய் ஹரிஹரனுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் களஞ்சியத்தை குத்தி கொலை செய்துள்ளார். இதில் களஞ்சியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று களஞ்சியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஹரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |