கொசு மருந்தை குடித்ததினால் குழந்தை இறந்த சம்பவம் பெற்றோர் இடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள பம்மல் பாத்திமா நகர் வெள்ளைச்சாமி தெருவில் வசித்து வரும் தமிழரசன் என்பவருக்கு 3 வயதில் கிஷோர் என்ற ஒரு ஆண்குழந்தை இருந்தது. இந்த குழந்தை இரவு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஆல் அவுட் கொசு மருந்தை தவறுதலாக குடித்திருக்கிறான். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக பெற்றோர் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அங்கிருந்து பின் எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கிஷோரை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கிஷோர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.