அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சாத்தூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் இடத்தில் கோவை மாவட்டத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவர் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் நாகராஜிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.