சாலை விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சன்னாசிபட்டி பகுதியில் பாபுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த அக்டோபர் 12 – ஆம் தேதியன்று பாபுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் விளம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு வாகனம் பாபுராஜின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பாபுராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரக்கு வாகன டிரைவரான காளிஸ்வரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.